இலங்கை உழைக்கும் ஊடகவியலாளர் சங்கத்தின் 2026 – 2027ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாகக் குழு தெரிவுசெய்யப்பட்டுள்ளது.
கடந்த 28ஆம் திகதி இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தில் (SLPI) இதற்கான நிர்வாகக் குழு தெரிவு வெளிப்படைத் தன்மையுடன் பத்திரிகை ஸ்தாபனத்தின் மத்தியஸ்தத்துடன் இடம்பெற்றது.
அதன் பிரகாரம் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கான புதிய தலைவராக ரங்க பண்டாரநாயக்க (SLRC) தெரிவுசெய்யப்பட்டதுடன், செயலாளராக மிதுன் ஜயவர்தனவும் (Lake House), பொருளாளராக சுப்ரமணியம் நிசாந்தனும் (Oruvan) தெரிவு செய்யப்பட்டனர்.


சங்கத்தின் தேசிய அமைப்பாளராக சாந்த விஜேசூரியவும் (Lanka Sky News), உப தலைவராக சமந்தி உபேக்ஸா வீரசேகரவும் (Upali Newspaper), உப செயலாளராக விந்தியா பாதுக்ககேவும் (Lake House), உப பொருளாளராக தம்மிக்கா டி சில்வாவும் (Red Star) தெரிவுசெய்யப்பட்டனர்.
அத்துடன், சங்கத்தின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களாக அகில ஜயவர்தன (Wijeya Newspapers), உதித குணவர்தன (Lake House), எச்.எம். ரேகா நிலுக்சி (Anidda), லக்ஸ்மன் முதுதந்தரிகே (Freelance), சிரோமி ரத்நாயக்க (Aruna), மில்ரோய் அந்தனி (Advocata), துமிந்த சம்பத் (Freelance), லசந்த ருகுணுகே (Freelance), தம்பிராசா நடராசா (Tamil Today), மாலனி வீரசிங்க (SLRC),சாமர விதானகே (SLRC), எஸ். ரேணுகா (Tamil Mirror), அஜித் செனவிரத்ன (Lanka Newsweb), பி.ஏ.ஜி. சமன் பிரேமரத்ன (SLRC), நிசாந்தி ரணதுங்க (SLBC), ஏ.எப். வசீம் அஹமட் (Bingo International) ஆகியோர் தெரிவாகினர்.
இதேவேளை, கடந்த நான்கு ஆண்டுகளாக துமிந்த சம்பத் இலங்கை உழைக்கும் ஊடகவியலாளர் சங்கத்தின் தலைவராகவும் செயலாளராக ரங்க பண்டாரனாயக்கவும், பொருளாளராக தம்பிராசா நடராசாவும் செயல்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.



