– குழு மீள்கட்டமைப்புக்கான நடவடிக்கையில் ஈடுபடும்
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் இடைக்கால குழுவின் தலைவராக, ஐக்கிய மக்கள் சக்தி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான எரான் விக்ரமரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.
இக்குழு இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் மீள்கட்டமைப்பு தொடர்பான நடவடிக்கையில் ஈடுபடும் என அமைச்சு அறிவித்துள்ளது.
அதன் ஏனைய உறுப்பினர்களாக, குமார் சங்கக்கார, ரொஷான் மஹானாம, துஷித ரதெல்ல, சிதத் வெத்திமுனி, அவந்தி கொலம்பகே, பிரகாஷ் ஸ்காப்டர், உபுல் குமாரப்பெரும, தினால் பிலிப்ஸ் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இலங்கை கிரிக்கெட் தலைவர் ஷம்மி சில்வா உள்ளிட்ட அதன் செயற்குழு உறுப்பினர்கள் இன்று முதல் அமுலாகும் வகையில் இராஜினாமா செயதிருந்தனர்.
இதனைத் தொடர்ந்து அவர்களது இராஜினாமா கடிதங்களை ஏற்றுள்ளதாக, விளையாட்டு மற்றம் இளைஞர் விவகார அமைச்சு அறிவித்திருந்தது.



