நிலக்கரி ஊழல்; ஐக்கிய மக்கள் சக்திக்கு எவ்வித தொடர்புகளும் இல்லை

1 Min Read

நிலக்கரி கொள்முதலில் இடம்பெற்ற ஊழல் விசாரணைகளை 2009 ஆம் ஆண்டிலிருந்து விசாரிப்பதே பொருத்தமாக இருக்குமென ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான விரிவான விசாரணைகளே உண்மைகளை வெளிச்சத்துக்கு கொண்டு வருமென்றும் அவர் குறிப்பிட்டார்.நிலக்கரி கொள்முதலில் இடம்பெற்ற முறைகேடுகளை விசாரிப்பதற்கு ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளமை குறித்து கருத்து தெரிவித்தபோதே, பாராளுமன்ற உறுப்பினர் மரிக்கார் இவ்வாறு குறிப்பிட்டார்.இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்;

நிலக்கரி அடிப்படையிலான மின் உற்பத்தி செயல்முறை முன்னெடுக்கப்பட்ட காலப்பகுதியிலிருந்து இடம்பெற்ற விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.

பக்கச்சார்பற்ற விசாரணைகளுக்கு இதுவே வழி வகுக்கும்.இது தொடர்பில் தமது கட்சிக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை.ஏனெனில்,இக்காலப்பகுதியில் எமது கட்சி ஆட்சியிலிருக்கவில்லை.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *