இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்தியத் துணை ஜனாதிபதி ஸ்ரீ சி.பி. ராதாகிருஷ்ணனை இன்று (19) சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, அவரை அன்புடன் வரவேற்பதாகத் தெரிவித்ததுடன் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் குறித்து ஆக்கபூர்வமான கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.
இச்சந்திப்பின்போது, வர்த்தகத்தை விரிவாக்கம் செய்தல், பொருளாதார தொடர்புகளை விரிவுபடுத்துதல் மற்றும் இரு நாடுகளுக்கும் பயனளிக்கக்கூடிய நடைமுறை ரீதியான வாய்ப்புகளை திறப்பது தொடர்பாக ஆக்கபூர்வமான கலந்துரையாடல் இடம்பெற்றது.

இலங்கையும் இந்தியாவும் வெறும் அண்டை நாடுகள் மட்டுமல்ல, பொதுவான வரலாறு, பொதுவான சவால்கள் மற்றும் பொதுவான எதிர்காலம் கொண்ட உண்மையான கூட்டாளர்களுமாவர். அனைத்து குடிமக்களுக்கும் இந்த கூட்டுறவின் பலன்களை அடைவதற்காக அதீத அபிலாஷைகள், உறுதியான நோக்கம் மற்றும் நம்பிக்கையுடன் முன்னேற வேண்டிய தருணம் தற்போது வந்துள்ளதாக சஜித் பிரேமதாச தெரிவித்தார்.



