டி20 உலகக் கோப்பை போட்டியில் இந்தியாவிடம் பாகிஸ்தான் தோல்வியடைந்ததை அடுத்து பாகிஸ்தான் ரசிகர் ஒருவர் தொலைக்காட்சி பெட்டியை உடைத்த சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்தியா – பாகிஸ்தான் மோதல்
கொழும்பு R. பிரேமதாசா மைதானத்தில் நேற்று இந்தியா-பாகிஸ்தான் இடையிலான போட்டி நடைபெற்றது.
இஷான் கிஷன் 40 பந்துகளில் 77 ஓட்டங்களும் சூர்யகுமார் யாதவ் 32 ஓட்டங்கள் சேர்ந்து இந்திய அணியின் வெற்றிக்கு அடித்தளம் அமைத்தனர்.
இதனால் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 175 ஓட்டங்கள் எடுத்தது.
தொலைக்காட்சியை உடைத்த பாகிஸ்தான் ரசிகர்
பாகிஸ்தானின் இந்த தோல்வியை ஏற்றுக் கொள்ள முடியாத பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர் ஒருவர் தன்னுடைய தொலைக்காட்சி பெட்டியை கிரிக்கெட் மட்டையால் அடித்து உடைக்கும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

வக்கார் ஆசம் என்ற பாகிஸ்தான் ரசிகர், ஒரு கட்டத்தில் தன்னுடைய் பொறுமையை இழந்து டிவியை திருப்பி போட்டு அடித்து நொறுக்கிறார்.
இந்த காட்சிகளை முகநூல் பக்கத்தில் வெளியிட்டு, இந்தியா பாகிஸ்தானை மீண்டும் வென்றுவிட்டது, அந்த விரக்தியில் என்னுடைய டிவியை உடைத்து விட்டேன் என்று பதிவுட்டுள்ளார்.




