தாய்லாந்தில் கட்டுமானப் பணிகளுக்கான கிரேன்(Crane) ஓடும் ரயிலின் மீது விழுந்த விபத்தில் 12 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.
ஓடும் ரயிலின் மீது விழுந்த கிரேன்
தாய்லாந்து நாட்டின் நக்கோன் ராட்சசிமா(Nakhon Ratchasima) நகரில் பான்தனான் கோட்(Banthaon Khot) பகுதியில் அதிவேக ரயில் பாதை திட்டப் பணிகளுக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பிரம்மாண்ட கட்டுமான கிரேன், அப்பகுதியில் சென்று கொண்டிருந்த பயணிகள் ரயில் மீது விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
22 பயணிகள் உயிரிழப்பு
இந்த விபத்தில் கிட்டத்தட்ட 22 பேர் வரை உயிரிழந்துள்ளனர், மேலும் பலியானோர் எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என்ற அச்சம் இருப்பதாகவும் அந்நாட்டு காவல்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
மேலும் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் பேரிடர் மேலாண்மை குழுவினர் மற்றும் மீட்பு குழுவினர் தீவிரமாக போராடி வருகின்றனர்.




