வெள்ளத்தினால் சேதமடைந்த கொழும்பு – மட்டக்களப்பு பிரதான ரயில் பாதை தற்போது மன்னம்பிட்டியில் துரிதமாக திருத்தம் செய்யப்பட்டு வருகிறது.
பேரிடர் காலத்தில் இருந்து கொழும்பு – மட்டக்களப்பு ரயில் சேவை முற்றாக பாதிக்கப்பட்டது.
தற்போது இயல்பு நிலைக்கு மாறி வரும் நிலையில் சேவையை மீள ஈடுபடுத்துவதற்காக ரயில் பாதைகள் ஆங்காங்கே திருத்தம் செய்யப்பட்டு வருகின்றது. குறிப்பாக மன்னம்பிட்டியில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் ரயில் பாதைகள் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டு இருந்தன.
அங்கு கனரக இயந்திரம் மூலம் இரவு பகலாக தொழிலாளர்களின் அர்ப்பணிப்பான சேவையில் அப்பாதைகள் திருத்தம் செய்யப்பட்டு வருகிறது .
மன்னம்பிட்டி பாலம் மற்றும் ரயில் பாதை திருத்தப்பட்டு நிறைவுறும் பட்சத்தில் விரைவாக கொழும்பு – மட்டக்களப்பு ரயில் சேவை மீண்டும் ஆரப்பிக்கப்படலாம் என்று நம்பப்படுகிறது.



