சூர்யவன்ஷியின் அதிரடியால் இந்திய அணி தொடர் வெற்றி

1 Min Read

வைபவ் சூர்யவன்ஷியின் அதிரடி ஆட்டத்தின் மூலம் சிம்பாப்வேயுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியிலும் 35 ஓட்டங்களால் வெற்றியீட்டிய இந்திய அணி தொடரை 3–0 என முழுமையாக கைப்பற்றியது.

ஹராரேயில் நேற்று முன்தினம் (26) நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடி இந்திய அணிக்கு சூர்யவன்ஷி 49 பந்துகளில் 8 பௌண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 81 ஓட்டங்களை விளாசினார். இந்தத் தொடரில் அவர் பெறும் இரண்டாவது அரைச்சதமாக இது இருந்தது. இதன்மூலம் இந்திய அணி 20 ஓவர்களுக்கும் 5 விக்கெட்டுகளை இழந்து 192 ஓட்டங்களைப் பெற்றது.

பதிலெடுத்தாட வந்த சிம்பாப்வே அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 157 ஓட்டங்களையே பெற்றது. மாயங்க் யாதவ் 3 விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.

உலக சம்பியனான இந்திய அணி கடந்த அயர்லாந்து மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடர்களை இழந்த பின்னரே முதல் தொடர் வெற்றி ஒன்றை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *