2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஷாவோமி நிறுவனத்தின் லாபம் சுமார் 43% முதல் 57% வரை கடுமையாகச் சரிந்துள்ளது.இதற்குக் முதன்மைக் காரணம், ஸ்மார்ட்போன்களுக்குத் தேவைப்படும் DRAM மெமரி சிப்களின் (Memory chips) விலை சர்வதேச சந்தையில் 88% வரை மிகக் கடுமையாக உயர்ந்ததாகும்.
இதனால் தனது முதன்மைத் தொழிலான ஸ்மார்ட்போன் உற்பத்தியில் நிறுவனத்திற்குப் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது.ஷாவோமி நிறுவனம் தனது எதிர்கால வளர்ச்சிக்காக மின்சார வாகன மற்றும் செயற்கை நுண்ணறிவு துறைகளில் பில்லியன் கணக்கில் முதலீடு செய்தது.
ஆனால், சீனாவில் மின்சார வாகனங்களுக்கான அரசு மானியங்கள் குறைக்கப்பட்டதாலும், அங்கு நிலவும் கடும் போட்டி காரணமாகவும் இந்நிறுவனத்தின் மின்சார வாகனப் பிரிவு மட்டும் ஒரே காலாண்டில் 3.1 பில்லியன் யுவான் இழப்பைச் சந்தித்துள்ளது.ஆரம்பத்தில் ஒரு மாதத்திற்கு 40,000 கார்கள் வரை விற்க இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில், தற்போது அது 10,000-க்கும் கீழே சரிந்துள்ளது.
ஷாவோமியின் ‘SU7’ மின்சார கார் நெடுஞ்சாலைகளில் திடீரென தானாகவே பிரேக் பிடித்து நின்றதும், முன்னதாக ஏற்பட்ட ஒரு சில விபத்துக்களும் நுகர்வோர் மத்தியில் அதன் தொழில்நுட்பத் தரம் குறித்த பெரும் சந்தேகங்களை எழுப்பியுள்ளன.TSMC அல்லது Intel போன்ற நிறுவனங்கள் தயாரிக்கும் உலகத் தரம் வாய்ந்த அதிநவீன செமிகண்டக்டர் தொழில்நுட்பங்களை சீனாவால் இன்னும் சொந்தமாக உருவாக்க முடியவில்லை.
கடந்த சில தசாப்தங்களாக, சீனா தனது அசுரத்தனமான தொழில்நுட்ப வளர்ச்சியால் உலகையே வியக்க வைத்தது. ஆனால், 2026 இல் ஷாவோமி நிறுவனம் எதிர்கொண்டுள்ள மிக மோசமான நிதி நெருக்கடி காரணமாக இன்று சீனாவிற்குள்ளேயே முதல் ஐந்து இடங்களைத் தக்கவைக்கப் போராடுகிறது.
ஷாவோமி போன்ற நிறுவனங்கள் ஏனைய நாடுகளின் மெமரி சிப்களையே பெரிதும் நம்பியுள்ளன. நடப்பு ஆண்டில் DRAM சிப்களின் விலை 88% உயர்ந்ததால், ஷாவோமியின் ஸ்மார்ட்போன் தயாரிப்புச் செலவு கட்டுக்கடங்காமல் போனது. மலிவு விலை சந்தையில் லாபம் இல்லை; பிரீமியம் சந்தையில் ஆப்பிள் மற்றும் சாம்சங் போன்ற நிறுவனங்களுடன் போட்டியிட ஷாவோமியிடம் சொந்தமாக தனித்துவமான ‘காப்புரிமை பெற்ற தொழில்நுட்பங்கள்’இல்லை.
ஸ்மார்ட்போன் சந்தை சரிந்தபோது, ஷாவோமி மின்சார வாகன சந்தையில் நுழைந்தது. ஆனால், சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சி நுகர்வோருக்கான மானியங்களைக் குறைத்தவுடன் இலாப வரம்பு முற்றிலும் மறைந்துவிட்டது. தற்போது ஷாவோமி கார்கள் விற்காமல் ஷோரூம்களில் தேங்கிக் கிடக்கின்றன. நெடுஞ்சாலைகளில் அதன் தானியங்கி ஓட்டுநர் மென்பொருள் சரியாக வேலை செய்யாமல் விபத்துக்களை ஏற்படுத்தியதால், மக்கள் அதன் பாதுகாப்பைக் கேள்விக்குள்ளாக்கியுள்ளனர்.




