அமெரிக்காவிலிருந்து வெளியேற ஈரான் அணியினருக்கு உத்தரவு

1 Min Read

பிஃபா உலகக் கிண்ணத்தில் லொஸ் ஏஞ்சல்ஸில் இடம்பெற்ற நியூசிலாந்துக்கு எதிரான போட்டி முடிவுற்ற கையோடு தமது அணியை அமெரிக்காவில் இருந்து வெளியேறும்படி அறிவுறுத்தப்பட்டதாக ஈரான் அணி பயிற்சியாளர் அமிர் கலனோயி குறிப்பிட்டுள்ளார். இலங்கை நேரப்படி நேற்று நடந்த இந்தப் போட்டி முடிந்த உடன் அணியினரை மெக்சியோ திரும்பும்படி அறிவுத்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும் இந்த உத்தரவை யார் பிறப்பித்தார் என்பதை அவர் கூறவில்லை. போட்டி முடிந்ததும் அணியினர் சாதாரணமாக மீண்டு வரும் நடைமுறையாக அன்று இரவை கலிபோர்னியாவில் கழிக்க திட்டமிட்டிருந்தனர். ஆனால் போட்டி முடிந்த உடன் ஈரான் அணி முகாமிட்டிருக்கும் 140 மைல்கள் தொலைவில் உள்ள மெக்சிகோவின் டிஜுவானா நகரை நோக்கி புறப்படும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ‘அவர்கள் மீண்டு வருவதற்குக் கூட காலம் தரவில்லை. போட்டி முடிந்த உடன் வெளியேறும்படி அவர்கள் கூறினார்கள்.’ என்று ஈரான் பயிற்சியாளர் செய்தியாளர்களிடம் தெரித்துள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *