உலகளாவிய சிறுவர்களில் அரைவாசி பேர் தங்களின் உடல்நலம், கல்வி மற்றும் உயிர்வாழ்வுக்கு அச்சுறுத்தலாக விளங்கும், ஒன்றுடன் ஒன்று தொடர்புடைய காலநிலை தொடர்பான அனர்த்தங்களை எதிர்கொண்டுள்ளனர் என்று ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியமான யுனிசெப் தெரிவித்துள்ளது.
காலநிலை நெருக்கடி மோசமடைந்து வருவதால், உலகளவில் வெப்ப அலை, புயல், வெள்ளம் மற்றும் வரட்சி ஆகியவற்றால் சிறுவர்கள் அதிகளவிலான அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதிக வருமானம் பெறும் நாடுகளைச் சேர்ந்த சிறுவர்கள் உட்பட, உலகெங்கிலுமுள்ள ஒவ்வொரு சிறுவரும் குறைந்தபட்சம் ஒரு அனர்த்தத்திற்காவது உள்ளாகும் அச்சுறுத்தலுக்கு முகம் கொடுத்துள்ளனர்.
இந்நிலையில் யுனிசெப் நிறுவனத்தின் நிர்வாகப் பணிப்பாளர் கேத்தரின் ரஸ்ஸல் கூறுகையில், வெப்ப அலை, காட்டுத்தீ, வரட்சி, வெள்ளம் ஆகியவற்றின் தாக்கங்கள் சிறுவர்களின் வாழ்வில் பெரிதும் தாக்கங்களை ஏற்படுத்தி வருகிறது.த கார்டியன்



