உலகளாவிய எரிசக்தி விலைகளில் ஏற்பட்ட திடீர் உயர்வைத் தொடர்ந்து, ஜப்பானின் மத்திய வங்கி தனது முக்கிய வட்டி விகிதத்தை 31 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்த்தியுள்ளது.
ஜப்பான் வங்கி தனது கொள்கை வட்டி விகிதத்தை 0.75 சதவீதத்தில் இருந்து 1 சதவீதமாக நேற்று உயர்த்தியது. இது 1995 ஆம் ஆண்டுக்கு பின்னர் எடுக்கப்பட்டிருக்கும் நடவடிக்கையாகும், ஈரானுடனான அமெரிக்க-இஸ்ரேல் போர் வாழ்க்கைச் செலவை அதிகரித்ததால், சில நாடுகளின் மத்திய வங்கிகள் வட்டி விகிதங்களை உயர்த்தியுள்ள நிலையில் ஜப்பானின் மத்திய வங்கி இம்முடிவை எடுத்துள்ளது.\
சொத்துகள், பங்குகள் போன்றவற்றின் விலைகள் வீழ்ச்சியடைந்ததால் ஏற்பட்ட பாதிப்புகளைச் சமாளிக்க, 1990 களில் ஜப்பானின் வட்டி விகிதங்கள் கடுமையாகக் குறைக்கப்பட்டன. விலைகள் வீழ்ச்சியடைந்து முன்னேற்றம் தேக்கமடைந்ததால், இரண்டு தசாப்தங்களாக அவை பூஜ்ஜியத்திற்கு அருகில் இருந்தன.
ஜப்பானின் மொத்த விலைகள், கடந்த ஆண்டை விட மே மாதத்தில் 6 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்து, கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத வேகத்தில் அதிகரித்துள்ளன. பி.பி.சி



