குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்காக செயல்படுத்தப்படும் ‘தமக்கென ஓர் இடம் -அழகான வாழ்க்கை’ தேசிய வீடமைப்பு வேலைத்திட்டத்தின், 2026ம் ஆண்டு வரவு செலவுத்திட்டத்தின் கீழ் கிளிநொச்சி மாவட்டத்திற்கு 181 வீடுகளுக்காக தலா இரண்டு மில்லியன் ரூபா வீதம் 362 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் முதல் கட்டமாக கரைச்சி பிரதே செயலாளர் பிரிவில் நிர்மாணிக்கப்பட்ட இரண்டு வீடுகளையும் கண்டாவளை பிரதேச செயலர் பிரிவில் நிர்மானிக்கப்பட்ட இரண்டு வீடுகளை தேசிய வீடமைப்பு நிர்மாணம் மற்றும் நீர் வழங்கல் பிரதி அமைச்சர் ரீ.பீ.சரத் பயனாளர்களிடம் நேற்று கையளித்தார். இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன், மாவட்ட அமைப்பாளர் ம.மோகன் மற்றும் மாவட்ட அரசாங்க அதிபர் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், கிராம அலுவலகர்கள், பிரஜாசக்தி உறுப்பினர்கள், பொது மக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.



