மத்திய கிழக்குப் பிராந்திய நெருக்கடியால் ஏற்பட்ட பொருளாதார நிச்சயமற்ற நிலை மற்றும் அண்மைய காலநிலை தொடர்பான இயற்கை அனர்த்தங்களின் தாக்கத்தை கருத்தில் கொண்டு, ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB), மேலதிக நிதியுதவியாக இலங்கைக்கான 100 மில்லியன் அமெரிக்க டொலரை வழங்க முன்வந்துள்ளது. இதன் மூலம், முன்னர் ஒதுக்கப்பட்டிருந்த 100 மில்லியன் அமெரிக்க டொலருடன் சேர்த்து மொத்த நிதியுதவி 200 மில்லியன் அமெரிக்க டொலராக அதிகரிக்கப்படவுள்ளது. கடந்த மார்ச் மாதத்தில், ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி வசதிகளின் கீழ் மொத்தம் 380 மில்லியன் அமெரிக்க டொலரைப் பெற்றுக்கொள்ள அமைச்சரவை அனுமதி வழங்கியிருந்தது. அதில், வர்த்தகம், முதலீடு மற்றும் தொழிற்துறை அபிவிருத்தித் திட்டத்தின் முதல் துணைத் திட்டத்திற்காக 100 மில்லியன் அமெரிக்க டொலர் ஒதுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், மத்திய கிழக்குப் பிராந்திய நெருக்கடியால் ஏற்பட்ட பொருளாதார நிச்சயமற்ற நிலை மற்றும் அண்மைய காலநிலை தொடர்பான இயற்கை அனர்த்தங்களின் தாக்கத்தை கருத்தில் கொண்டு, மேலும் 100 மில்லியன் அமெரிக்க டொலர் கூடுதல் நிதியுதவியை வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி இணக்கம் தெரிவித்துள்ளது.
ஆசிய அபிவிருத்தி வங்கி மேலும் 100 மில். டொலர் நிதியுதவி

Leave a Comment


Subscribe to our newsletter to get our newest articles instantly!
Most Read
- Advertisement -
