இலங்கை அதிபர் சேவை தரம் III போட்டிப் பரீட்சை ஜூன் 07இல்

0 Min Read

2025ஆம் ஆண்டுக்கான இலங்கை அதிபர் சேவையின் தரம் III இற்குப் மட்டுப்படுத்தப்பட்ட அடிப்படையில் சேர்த்துக்கொள்வதற்கான போட்டிப் பரீட்சை எதிர்வரும் 07ஆம் திகதி நடத்தப்படவுள்ளது.

இதற்கான அனுமதிப் பத்திரங்களை தங்களது திணைக்கள இணையத்தளத்தின் ஊடாக ஒன்லைன் மூலம் பெற்றுக்கொள்ள முடியும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதற்கு முன்னர் இப்பரீட்சை ஏப்ரல் மாதம் 26ஆம் திகதி நடத்தப்படவிருந்த போதிலும், தவிர்க்க முடியாத காரணத்தினால் அதனைத் திகதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கக் கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *