அவுஸ்திரேலியாவில் சுறா தாக்கி ஒருவர் பலி

1 Min Read

வடகிழக்கு அவுஸ்திரேலிய மாநிலமான குயின்ஸ்லாந்தின் கடற்கரையில் சுறா தாக்கியதில் ஒருவர் நேற்று உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் மேலும் அவர்கள் தெரிவிக்கையில், கெய்ர்ன்ஸ் மற்றும் டவுன்ஸ்வில் நகரங்களுக்கு இடையிலுள்ள கசோவரி கடற்கரையில் படகு இறங்குதளமொன்றிற் க்கு அவசர சேவைகள் வரவழைக்கப்பட்டன. அருகிலுள்ள மணல் திட்டில் நீந்திக்கொண்டிருந்த 39 வயதுடைய நபர் சுறாவால் தாக்கப்பட்டதாக வந்த தகவலையடுத்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அந்நபர் நீரிலிருந்து மீட்கப்பட்ட போதிலும் சுறா தாக்குதலால் ஏற்பட்ட காயங்களால் உயிரிழந்தார் என்று குயின்ஸ்லாந்து பொலிஸார் குறிப்பிட்டனர்.

கடந்த சனிக்கிழமை மேற்கு அவுஸ்திரேலியாவின் பேர்த் அருகே ஈட்டி மீன்பிடித்தலில் ஈடுபட்டிருந்த 38 வயதுடைய ஒருவர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, இது இரண்டாவது சுறா தாக்குதல் மரணம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பி.பி.சி

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *