இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து மகளிர் ஏ அணிக்கு எதிரான டி20 தொடருக்கு இலங்கை மகளிர் ஏ அணித் தலைவியாக சத்யா சந்தீபனி செயற்படவுள்ளார். ஏற்கனவே இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடரிலும் இலங்கை ஏ அணிக்கு சந்தீபனி தலைவியாக செயற்பட்டிருந்தார். எனினும் அந்தத் தொடரை இலங்கை ஏ அணி 0–1 என இழந்தமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மூன்று போட்டிகளைக் கொண்ட டி20 தொடர் எதிர்வரும் மே 21 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இந்தத் தொடரில் இரண்டு மற்றும் மூன்றாவது ஒருநாள் போட்டிகள் மே 23 மற்றும் 25 ஆம் திகதிகளில் நடைபெறும். அனைத்துப் போட்டிகளும் தம்புள்ளை சர்வதேச அரங்கிலேயே நடைபெறவுள்ளது.
இலங்கை மகளிர் ஏ டி20 குழாம்: சத்யா சந்தீபனி (தலைவி), சஞ்சனா காவிந்தி (வி.கா.), விடொக்ஷா பலசூரிய, விடினி டி அல்விஸ், விஷ்மி குணரத்ன, தெவ்மி விஹங்கா, சுமுது நிசன்சலா (வி.கா.), ரஷ்மிகா செவ்வந்தி, பியுமி வத்சலா, பிரமுதி மெத்சர, சச்சினி நிசன்சலா, ஷஷினி கிம்ஹானி, அசேனி தலகுன, சமுதி பிரபோதா, ரன்தி பிரேமரத்ன, சதீஸ்குமார் சஜின்தினி.



