போர் வீரர்கள் நினைவு நாள் ஒத்திகைக்கு இடையூறு

1 Min Read

போர் வீரர்கள் நினைவு நாள் ஒத்திகை நிகழ்வுக்கு இடையூறு செய்தமை விமல் வீரவங்ச உள்ளிட்ட குழுவினருக்கு எதிராக மேலதிக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

இன்றைய தேசிய போர் வீரர்கள் நினைவு தினத்தை முன்னிட்டு, ஜனாதிபதி தலைமையில் பாராளுமன்ற விளையாட்டரங்கில் அமைந்துள்ள இராணுவ போர்வீரர்கள் நினைவுச் சின்னம் முன்பாக நினைவு நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிகழ்விற்கான ஒத்திகை நேற்று (18)அன்று நடைபெற்றது.

இந்த ஒத்திகை மற்றும் பிரதான நிகழ்விற்கான ஏற்பாடுகள் நடைபெற்று கொண்டிருந்த வேளையில், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச உட்பட சுமார் 35 பேர் கொண்ட குழுவொன்று, அதிகாரிகளின் கடமைகளுக்கும் ஒத்திகை நடவடிக்கைகளுக்கும் இடையூறு விளைவிக்கும் வகையில் அனுமதியின்றி போர் வீரர் நினைவுச் சின்ன வளாகத்திற்குள் நுழைய முயன்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த சந்தர்ப்பத்தில் பொலிஸ் அதிகாரிகள் அவர்களின் முயற்சியை தடுத்து, அங்கு இருந்த குழுவினரை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச உள்ளிட்ட குழுவினருக்கு எதிராக மேலதிக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *