கைதான 120 வெளிநாட்டவர்களுக்கும் மே 06 வரை விளக்கமறியல்

1 Min Read

ராஜகிரிய பகுதியில் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்ட 120 வெளிநாட்டுப் பிரஜைகளையும் மே 06ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு இன்று (04) கொழும்பு, புதுக்கடை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ராஜகிரிய,மெதவெலிகட பகுதியில் தங்கியிருந்த 120 வெளிநாட்டவர்கள் நேற்று  கைது செய்யப்பட்டதுடன் அவர்களில் சீனா, வியட்நாம், பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, மற்றும் மலேசியா ஆகிய நாட்டவர்களும் உள்ளடங்குகின்றனர்.

ராஜகிரிய, பகுதியில் சட்டவிரோத நிதி மோசடிகள் மற்றும் பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்துள்ள குற்றச்சாட்டின் பேரில் சுமார் 120 வெளிநாட்டவர்களை நேற்று பொலிஸார் கைது செய்தனர்.

ராஜகிரிய, மெத வெலிக்கடை வீதியிலுள்ள கட்டிடமொன்றில் சட்டவிரோத நிதி மோசடிகள் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரிலேயே மேற்படி 120 வெளிநாட்டவர்களும் கைது செய்யப்பட்டனர்.

சந்தேகநபர்களிடமிருந்து பெருமளவிலான கணினிகள் மற்றும் கையடக்கத் தொலைபேசிகளையும் பொலிஸார் கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *