வடமாகாண சுற்றுலாப் பணியகத்தின் தலைவர் Dr. J. விவேகானந்தன் கடந்த 29 ஆம் திகதி மன்னார் மாவட்டத்திற்கு விஜயம் ஒன்றினை மேற்கொண்டுள்ளார்.
இதன்போது அவர் மன்னார் மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத் தளங்களுக்கு விசேட களப்பயணம் மேற்கொண்டிருந்தார்.
“வடமாகாண சுற்றுலா மூலோபாயத் திட்டத்தின் கீழ் (“2026–2030”) மன்னாரை ஒரு சர்வதேச தரத்திலான சூழலியல் மற்றும் பாரம்பரிய சுற்றுலா மையமாக மாற்றுவதே இந்த விஜயத்தின் முக்கிய நோக்கமாக அமைந்திருந்தது.
களப்பயணத்தின் போது வரலாற்றுச் சிறப்புமிக்க மன்னார் ஒல்லாந்தர் கோட்டையை பாதுகாத்து சுற்றுலாப் பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்துதல், சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் நகரப்பகுதி கடற்கரைகள் மற்றும் கடற்கரை பூங்காக்கள் அழகுபடுத்துதல் மற்றும் மன்னாரின் தனித்துவமான பல்லுயிர்த்தன்மை மற்றும் உள்ளூர் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் திட்டங்களை நடைமுறைப்படுத்தல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக ஆராயப்பட்டது.



