முல்லைத்தீவு முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரியின் பவளவிழாவினை முன்னிட்டு முல்லை வலய பாடசாலை உதைபந்தாட்ட அணிகளுக்கிடையிலான உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி நடைபெற்று இறுதிப்போட்டி நேற்று (02) நடைபெற்றுள்ளது.
பாடசாலை முதல்வர் ஜெயவீரசிங்கம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதமவிருந்தினராக முல்லைத்தீவு மாவட்ட உதவி அரசாங்க அதிபர் லிசோ கேகிதா அவர்களும் மூத்த உதைபந்தாட்ட வீரனும் கோல்காப்பாளருமான எஸ்.எல்.பதுறுதீன் அவர்களும் கலந்து சிறப்பித்துள்ளதுடன் அயல் பாடசாலைஅதிபர்கள் திணைக்கள அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து சிறப்பித்துள்ளார்கள்.
இறுதிப்போட்டிக்கு தெரிவான முல்லைத்தீவு மகாவித்தயாலய அணியும்,அளம்பில் றே.கா. மகாவித்தியாலய அணி வீரர்களுடன் பிரதம விருந்தினர்கள் சிறப்பு விருந்தினர்கள் பான்ட் வாத்திய அணியிசையுடன் அழைத்து வரப்பட்டு போட்டிகள் நடைபெற்றன.
அளம்பில் றோமன்கத்தோலிக்க மகாவித்தியாலய முல்லைத்தீவு மகாவித்தியாலய அணிக்கு ஒருகோல் அடித்து வெற்றிக்கிண்ணத்தினை சுவீகரித்துக்கொண்டது.
வெற்றிவெற்ற அணிகளுக்கான பணப்பரிசில் உள்ளிட்ட வெற்றிக்கிண்ணம்,பதங்கங்கள் என்பன விருந்தினர்களால் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.



