இலங்கை தமிழரசு கட்சியின் மே தின கூட்டமானது நேற்று முன்தினம் (01) மாங்குளம் பகுதியில் நடைபெற்றது.
குறித்த கூட்டம் தொடர்பாக பல விமர்சனங்கள் மக்களால் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் தமிழ் மக்கள் கூட்டணியில் நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் மயூரன் குறித்த மே தின கூட்டத்தில் கலந்து கொண்டதை அவதானிக்க முடிந்தது.
இதனால் வீட்டு கட்சியும், மான் கட்சியும் இணைந்துவிட்டதா என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.



