இலங்கை தமிழரசு கட்சியின் ஸ்தாபக தலைவர் தந்தை செல்வா அவர்களது 49வது நினைவு நாளை முன்னிட்டு இலங்கை தமிழரசு கட்சியின் வாலிபர் முன்னணியினரால் நினைவு அஞ்சலி மற்றும் அவரது ஞாபகார்த்தமாக இரத்த தான நிகழ்வு என்பன வந்தாறுமூலையில் அமைந்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் சிறிநாத் ஐயாவினுடைய அலுவலகத்தில் இன்றைய தினம் நடைபெற்றது.

குறித்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்கள்,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள்,மட்டு மாநகர சபை முதல்வர்,மாநகர சபை உறுப்பினர்கள்,பிரதேச சபைகளின் தவிசாளர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள், வாலிபர் முன்னனி உறுப்பினர்கள், மகளிரணி உறுப்பினர்கள், கட்சி ஆதரவாளர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டதுடன் உயிர்காக்கும் உன்னத பணியான இரத்த தான பணியிலும் ஈடுபடுடனர்.











