பிரித்தானிய இணையப் பாதுகாப்புக்கு மூன்று நாடுகள் அச்சுறுத்தல்

1 Min Read

பிரித்தானியாவின் இணையப் பாதுகாப்புக்கு ரஷ்யா, ஈரான் மற்றும் சீனா ஆகிய மூன்று நாடுகளும் அச்சுறுத்தலாக விளங்குவதாக அந்நாட்டின் தேசிய இணையப் பாதுகாப்பு மத்திய நிலையத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ரிச்சர்ட் ஹார்ன் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு வாரமும் குறைந்தது நான்கு முக்கிய இணையவழித் தாக்குதல்களை பிரித்தானியா எதிர்கொள்வதாகவும், நவீன வரலாற்றில் மிகப் பெரிய புவிசார் அரசியல் மாற்றத்தை சந்தித்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், பிரித்தானியாவை இலக்கு வைத்து தேசிய அளவில் இணைய வழித்தாக்குதல்கள் முன்னெடுக்கப்படுகின்றன. அந்த தாக்குதல்களில் பெரும்பாலானவற்றுக்கு பின்னால், வெளிநாட்டு அரசாங்கங்களுடன் தொடர்புடைய ஊடுருவல்காரர்கள் (ஹெக்கர்ஸ்) உள்ளனர்.அண்மைக்காலமாக பிரித்தானியா, தொடர்ச்சியான பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் இணையவழித் தாக்குதல்களை எதிர்கொள்கின்றது. தேசிய சுகாதார சேவை மற்றும் நாட்டின் ரோயல் தபால் சேவை என்பவற்றுக்கு இவர்க்ள குறிப்பிடத்தக்க இடையூறுகளை ஏற்படுத்தியுள்ளனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *