நியூசிலாந்து விமானம் கிழக்கு சீனக் கடற்பரப்பில் ரோந்து

1 Min Read

நியூசிலாந்து விமானமொன்று, மஞ்சள் கடல், கிழக்கு சீனக் கடலின் வான்வெளி மற்றும் கடற்பரப்பில் ரோந்துடன் கூடிய உளவு வேலைகளில் ஈடுபட்டதாக சீனா வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்நடவடிக்கை சீனாவின் பாதுகாப்பு நலன்களைப் பாதித்ததோடு தவறான புரிதல் மற்றும் தவறான கணிப்புகளின் அபாயங்களை அதிகரிக்கவும் செய்தது என்று சீன வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் குவோ ஜியாகுன் தெரிவித்துள்ளார்.

அத்தோடு இச்செயற்பாடு சிவில் விமானப் போக்குவரத்தின் ஒழுங்கைக் கடுமையாகச் சீர்குலைத்தது என்றும் அவர் கூறியுள்ளார்.

இக்குற்றச்சாட்டுக்கு அறிக்கை விட்டு பதிலளித்துள்ள நியூசிலாந்து பாதுகாப்புப் படை, ‘ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்களின் கீழ், வடக்கு ஆசிய கடற்பரப்பில் வட கொரியத் தடைகளைத் தவிர்ப்பதைக் கண்காணிக்கும் நடவடிக்கைகளில் ரோயல் நியூசிலாந்து விமானப்படை விமானமொன்று ஈடுபட்டுள்ளது. எமது படையினர் சர்வதேச சட்டம் மற்றும் அப்பகுதிக்கான சிவில் விமானப் போக்குவரத்து நடைமுறைகளுக்கு அமைய செயற்பட்டனர் என்று தெரிவித்தது

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *