உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழு ஆகியவற்றால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளைச் செயற்படுத்துவதை மேற்பார்வையிட நிரந்தரமான பொறிமுறையொன்று இதுவரை இல்லாத குறைபாடு கண்டறியப்பட்டுள்ளது.
இதனைத் நிவர்த்தி செய்ய ஜனாதிபதி செயலகத்தின் கண்காணிப்பின் கீழ், சம்பந்தப்பட்ட அமைச்சுகள் மற்றும் நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பான நிபுணர் ஒருவர் அடங்கிய குழுவொன்று இதற்காக நியமிக்கப்படவுள்ளது.



