கடந்த மாதம் டீசல், பெற்றோல், விமான எரிபொருள் மற்றும் கடல்சார் எரிபொருள் ஆகியவற்றை உள்ளடக்கிய சீனாவின் சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் ஏற்றுமதி 4.6 மில்லியன் மெற்றிக் தொன்களாக இருந்ததாக பொது சுங்க நிர்வாகத் தரவுகள் தெரிவிக்கின்றன.

மத்திய கிழக்கு போரைத் தொடர்ந்து டீசல், பெற்றோல், விமான எரிபொருள் மற்றும் கடல்சார் எரிபொருள் ஆகியவற்றை உள்ளடக்கிய சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் ஏற்றுமதியை இடைநிறுத்தியுள்ள சூழலிலும் இவ்வளவு தொகை எரிபொருளை சீனா ஏற்றுமதி செய்துள்ளது. இந்த ஏற்றுமதித் தடையால் சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் பொருட்களின் மார்ச் மாத ஏற்றுமதியை கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 11.5 சதவீத வீழ்ச்சியை அந்தத் தரவுகள் சுட்டிக்காட்டியுள்ளன. ஜெட் எரிபொருளை உள்ளடக்காத இத்தடை, இம்மாதமும் நீடிக்கப்படலாமென எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், உதவி கோரியுள்ள பிராந்திய நாடுகளுக்குச் செல்லும் சிறிய அளவிலான ஏற்றுமதிக்கு விலக்கு அளிக்கப்படலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



