மதுபாவனை மற்றும் இதர போதைப் பாவனைகளுடன் வாகனங்களை செலுத்தும் சாரதிகளைக் கண்டறிவதற்காக, 150 விசேட உபகரணத் தொகுதிகள் மத்திய மாகாணத்தில் உள்ள பொலீஸ் நிலையங்களுக்கு வழங்கப்பட உள்ளன.
மத்திய மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் பத்தினாயக்கவிடம் மத்திய மாகாண ஆளுநர் பேராசிரியர் சரத் அபேகோன் நேற்று முன்தினம் (18) கண்டிலுள்ள தமது காரியாலயத்தில் வைத்து அவற்றைக் கையளித்தார்.

இவற்றை தனியார் அமைப்புக்கள் இரண்டு இணைந்து வழங்கி இருந்தன. இந்த நவீன கருவிகள் மூலம், அபாயகரமான போதைப்பொருட்களைப் பயன்படுத்தும் தனி நபர்களை மிக எளிதாகக் கண்டறிய முடியும் என இதனை வழங்கிய நிறுவனங்கள் தெரிவித்தன. இலங்கை மருத்துவ சங்கம் (SLMA) மற்றும் டெல்மேஜ் ஃபோர்சைத் (Delmege Forsyth) குழுமம் என்பன இணைந்து இதனை வழங்கின.



