சம்பியனானது எவர்டொப் விளையாட்டுக் கழகம்

1 Min Read

சம்மாந்துறை நியூ சன் விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற மின்னொளி கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் அட்டாளைச்சேனை எவர்டொப் விளையாட்டுக் கழகம் சம்பியன் கிண்ணத்தை வென்றது.

சம்மாந்துறை பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற இந்தத் தொடரின் இறுதிப் போட்டியில் அக்கரைப்பற்று லீ ஸ்டார் விளையாட்டுக் கழகத்தை எதிர்கொண்ட எவர்டொப் அணி 5 ஓவர்களுக்கும் நிர்ணயித்த 55 ஓட்ட வெற்றி இலக்கை காத்து 20 ஓட்டங்களால் வெற்றியீட்டியது. இந்தத் தொடரில் மொத்தம் 40 அணிகள் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. சம்பியன் கிண்ணத்தை வென்ற எவர்டொப் அணிக்கு 40 ஆயிரம் பணப்பரிசு மற்றும் வெற்றிக் கிண்ணமும், லீ ஸ்டார் அணிக்கு 20 ஆயிரம் பணப்பரிசும் கிண்ணமும் அதிதிகளினால் வழங்கப்பட்டது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *