பாராளுமன்ற வீதிக்கு அருகில் ஐ.ம.ச. ஆர்ப்பாட்டம்! – தரமற்ற நிலக்கரி குறித்து எதிர்ப்பு; பாராளுமன்ற வீதி மூடல்

1 Min Read

வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடியை இராஜினாமா செய்யுமாறு கோரி, பத்தரமுல்லை பொல்துவ சந்தியில் உள்ள பாராளுமன்றத்திற்கு நுழையும் வீதியில், ஐக்கிய மக்கள் சக்தி கட்சியினர் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்து வருகின்றனர்.

குறித்த போராட்டம் காரணமாக பாராளுமன்ற வீதி மூடப்பட்டுள்ளதாக எமது ஊடகவியலாளர் தெரிவித்தார்.

குறித்த ஆர்ப்பாட்டத்தில் ஐ.ம.ச. பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அக்கட்சியின் ஆதாரவாளர்கள் பங்கேற்றுள்ளனர்.

தரமற்ற நிலக்கரி கொள்வனவு காரணமாக பில்லியன் கணக்கான நஷ்டம் ஏற்பட்டுள்ளதால், குறித்த விடயத்திற்கு பொறுப்பான அமைச்சரை உடனடியாக அவரது பதவியிலிருந்து நீக்க வேண்டும் என வலியுறுத்துவதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை வலுசக்தி அமைச்சர் குமார ஜயகோடிக்கு எதிராக எதிர்க்கட்சியால் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானம் தொடர்பான பாராளுமன்ற விவாதம் இன்று (10) இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *