தேசத்தை வளப்படுத்துவதில் அர்ப்பணிப்புடன் உழைத்து வருகின்ற செரண்டிப் மா ஆலை, 2026 சர்வதேச மகளிர் தினத்தை வெகு சிறப்பாகக் கொண்டாடியுள்ளது. தனது பெண் ஊழியர்கள் மற்றும் பெண் உதவிப் பணியாளர்களின் மதிப்புமிக்க பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் நிறுவனத்திலுள்ள பெண்களுக்கான விசேட நிகழ்ச்சித்திட்டமொன்றை ஏற்பாடு செய்துள்ளது.
ஆரோக்கியம், நலன், மற்றும் பாராட்டு ஆகியவற்றை மையமாகக் கொண்ட ஒரு தினத்திற்காக 57 பெண்களை இம்முயற்சி ஒன்றுதிரட்டியிருந்ததுடன், ஆதரவளிக்கின்ற மற்றும் அனைவரையும் அரவணைக்கின்ற வேலைத்தள சூழலை வளர்ப்பதில் நிறுவனம் தொடர்ச்சியாக கவனம் செலுத்தி வருவதையும் இதன் மூலமாகப் பிரதிபலிக்கச் செய்துள்ளது.

ஹேமாஸ் வைத்தியசாலையில் உணவியல் நிபுணராக சேவையாற்றும் வைத்தியர் திஸ்னா குமாரி அவர்கள் நடாத்திய ஆரோக்கியமான வாழ்க்கைமுறைக்கான உணவுப்பழக்கத்தை நிர்வகிப்பது தொடர்பான விழிப்புணர்வு அமர்வொன்றுடன் இந்நிகழ்ச்சித்திட்டம் ஆரம்பமானது. சமநிலைப் போசாக்கு மற்றும் ஆரோக்கிய வாழ்க்கைப் பழக்கவழக்கங்கள் தொடர்பான நடைமுறைரீதியான வழிகாட்டல் இந்த அமர்வின் போது வழங்கப்பட்டதுடன், இதில் பங்குபற்றியவர்களுக்கு தனிப்பட்ட உணவுப்பழக்கவழக்க திட்டங்கள் மற்றும் தனித்தனி ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பும் வழங்கப்பட்டது.உடற்பருமன் சுட்டெண் (BMI) அளவீடு, குருதியழுத்தப் பரிசோதனைகள், குருதியில் சீனியின் அளவு தொடர்பான பரிசோதனை உள்ளிட்ட அடிப்படைச் சுகாதாரப் பரிசோதனைகள் பலவற்றின் மூலமாக நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் பயன்பெற்றதுடன், தமது ஒட்டுமொத்த ஆரோக்கியம் மற்றும் நலன் குறித்த தெளிவான புரிந்துணர்வையும் பெற்றுள்ளனர்.




