அப்பாவிற்காக தோனி, கபில் தேவிடம் மன்னிப்பு கேட்ட யுவராஜ் சிங்? கிரிக்கெட்டில் உலகில் விவாதம்

1 Min Read

கபில் தேவ் மற்றும் தோனியிடம் மன்னிப்பு கேட்க விரும்புவதாக முன்னாள் வீரர் யுவராஜ் சிங் கூறியது விவாத பொருளாக மாறியுள்ளது.

யுவராஜ் சிங்

இந்திய கிரிக்கெட் அணி இரண்டு முறை உலகக்கிண்ணத்தை வென்றதில் முக்கிய பங்கு வகித்தவர் யுவராஜ் சிங்.

Yuvraj Singh/MS Dhoni

தனது அதிரடி துடுப்பாட்டத்தின் மூலம் ஏராளமான ரசிகர்களை கொண்ட யுவராஜ் சிங் 2019ஆம் ஆண்டில் ஓய்வு பெற்றார்.

யுவராஜ் சிங்கின் தந்தையும், பஞ்சாபின் புகழ்பெற்ற கிரிக்கெட் பயிற்சியாளருமான யோக்ராஜ் சிங் சமீபத்தில் சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்தார்.

அவர், 1980களில் அப்போதைய கேப்டனான கபில் தேவ் தன்னை அணியில் இருந்து நீக்கியதற்காக, அவரை கொல்ல விரும்புவதாக தெரிவித்தார்.

Kapil Dev/MS Dhoni

அதேபோல் தனது மகன் யுவராஜ் சிங்கின் கிரிக்கெட் வாழ்க்கையை எம்.எஸ்.தோனி அழித்துவிட்டார் என்றும் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

மன்னிப்பு கேட்க விரும்புகிறேன்

இந்த நிலையில், “நான் கபில் தேவ் மற்றும் எம்.எஸ்.தோனியிடம் மன்னிப்பு கேட்க விரும்புகிறேன்” என்று யுவராஜ் சிங் கூறியதை ஸ்போர்ட்ஸ் டாக் ஊடகம் வெளியிட்ட முன்னோட்ட காணொளியில் பகிர்ந்துள்ளது.

Yuvraj Singh/MS Dhoni

அத்துடன் அந்த காணொளியில், யுவராஜ் சிங்கிடம் “அந்தப் பேட்டிகளைக் கேட்கும்போது உங்களுக்கு வருத்தமாக இருக்கிறதா?” என்றும் ஒரு கேள்வி கேட்கப்பட்டது.

அந்தக் கேள்வி எழுப்பப்படும்போது, யோக்ராஜ் சிங்கின் புகைப்படம் திரையில் தோன்றுகிறது. அக்கேள்விக்குப் பதிலளிக்கும் விதமாகவே இருக்கலாம்; யுவராஜ், “அப்பாவிடம் நான், ‘இது சரியல்ல’ என்று கூறினேன்” என்று குறிப்பிடுகிறார்.

ஆகையால், யுவராஜ் தெரிவித்துள்ள இந்த ‘மன்னிப்பு’ அனேகமாக இதுதொடர்பாகவே அமைந்திருக்கலாம் என்ற விவாதத்தைத் தூண்டியுள்ளது.

Yuvraj Singh

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *