கடலில் சிக்கி தவிக்கும் 1900 கப்பல்கள்: முதன்மை களமாக மாறும் கடற்பரப்புகள்

1 Min Read

மத்திய கிழக்கில் மோதல் தொடங்கியதில் இருந்து இதுவரை 20க்கும் மேற்பட்ட வணிக கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு இருப்பதாக இந்திய கடற்படை தளபதி தெரிவித்துள்ளார்.

கடற்பரப்புகள் வியூகங்களின் முதன்மை களம்

இந்திய கடற்படை தளபதி அட்மிரல் தினேஷ் கே. திரிபாதி சமீபத்தில் நடைபெற்ற கடற்படை விருது வழங்கும் விழாவில் பேசிய போது, உலகளவில் மாறி வரும் அரசியல் சூழ்நிலைகள் மற்றும் பிராந்தியத்தை பாதுகாப்பது தொடர்பான இந்திய கடற்படையின் முக்கியத்துவம் குறித்து விவரித்தார்.

அப்போது, சமீபத்திய சூழ்நிலைகளின் படி கடற்பரப்புகள் இனி இரண்டாம் நிலை விவகாரங்களாக இருக்காது என்றும் அவை இனி வியூகங்களை வெளிப்படுத்தும் முதன்மை களமாக மாறிவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

கடலில் சிக்கி தவிக்கும் 1900 கப்பல்கள்: முதன்மை களமாக மாறும் கடற்பரப்புகள் | 1900 Ships Stranded In Strait Of Hormuz

சிக்கி தவிக்கும் 1,900 கப்பல்கள்

ஈரானுக்கு எதிரான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய படைகளின் இராணுவ நடவடிக்கைக்கு பிறகு மத்திய கிழக்கு கடல் பிராந்தியத்தில் 20-க்கும் மேற்பட்ட வணிகக் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

மேலும் இராணுவ நடவடிக்கை காரணமாக சுமார் 1,900 கப்பல்கள் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் சிக்கித் தவித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஹார்முஸ் ஜலசந்தியில் போருக்கு முன்பு சராசரியாக 130 கப்பல் போக்குவரத்துகளில் இருந்து தற்போது வெறும் 6 அல்லது 7 போக்குவரத்துகள் மட்டுமே நடைபெறுகிறது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *