இலங்கைக்கு எதிரான இரு போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடருக்கு 15 பேர் கொண்ட மேற்கிந்திய தீவுகள் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ரொஸ்டன் சேஸ் தலைமையிலான இந்த அணிக்கு ஜொமல் வொரிகன் உப தலைவராக செயற்படுகிறார்.
மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இலங்கை அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டி நோர்த் சௌன்டில் எதிர்வரும் ஜூன் 25 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இதற்கான மேற்கிந்திய தீவுகள் அணியில் அனுபவ வீரர்களான ஷாய் ஹோப், கெமர் ரொச், அல்சாரி ஜோசபுடன் வளர்ந்து வரும் வீரர்களான ஜோன் கெம்பல், டகனரைன் சந்தர்ப்போல், அமிர் ஜங்கு மற்றும் ஜெய்டன் சீல்ஸ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். மேற்கிந்திய தீவுகள் அணி தற்போதைய உலக டெஸ்ட் சம்பியன்சிப் பருவத்தில் ஆடிய எட்டுப் போட்டிகளில் ஏழில் தோல்வியுற்றிருக்கும் நிலையில் உலக டெஸ்ட் சம்பியன்சிப் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.
மேற்கிந்திய தீவுகள் அணி: ரொஸ்டன் சேஸ் (தலைவர்), ஜொமல் வொரிகன் (உப தலைவர்), ஜோன் கெம்பல், டகனரைன் சந்தர்ப்போல், ஜோசுவா டா சில்வா (வி.கா.), ஜஸ்டின் கிரீவ்ஸ், கெவன் ஹொட்ஜ், ஷாய் ஹோப், அமிர் ஜங்கு, அல்சாரி ஜோசப், ஷமர் ஜோசப், பிரன்டன் கிங், அன்டர்சன் பிலிப், கெமர் ரொச், ஜெய்டன் சீல்ஸ்.



