அவுஸ்திரேலிய சிறுமி பாகிஸ்தானில் சுட்டுக்கொலை

1 Min Read

அவுஸ்திரேலிய சிறுமியொருவர் தனது குடும்பத்தினருடன் விடுமுறையில் சென்றிருந்த போது பாகிஸ்தானில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்துமாறு அவுஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் பாகிஸ்தானிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்த சிறுமியும் அவரது குடும்பத்தினரும் வாடகைக்கு எடுத்திருந்த காரில் பஞ்சாப் மாகாணத்தின் வடக்கு நகரமான சக்வாலில் பயணித்துக் கொண்டிருந்த போது ஆயுதம் ஏந்திய கொள்ளையர்களால் பணயக்கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர். அச்சமயம் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் சிறுமி உயிரிழந்ததோடு அவரது தந்தையும் சகோதரரும் காயமடைந்தனர். இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விசாரணையில் பொலிஸார் கொள்ளையர்கள் துப்பாக்கி பிரயோகம் செய்ததால் தாம் பதிலுக்கு துப்பாக்கி பிரயோகம் செய்ததாகக் கூறியுள்ளனர். ஆனால் சிறுமியினர் தந்தை பொலிஸாரே முதலில் துப்பாக்கி பிரயோகம் செய்ததாகக் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பில் வெளிப்படையான விசாரணையை மேற்கொள்ளுமாறும் அவுஸ்திரேலிய பிரதமர் மேலும் குறிப்பிட்டு கேட்டுக் கொண்டுள்ளார்.
பி.பி.சி, த இன்டிபென்டன்ட்

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *