மூலதனச் செலவுக்காக அடுத்த வருட பட்ஜட்டில் 2000 பில்லியன் ரூபா ஒதுக்கப்படவுள்ளது.இது குறித்து அரசாங்கம் ஆலோசித்து வருவதாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டொக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். இவ்வருடம் மூலதனச் செலவுக்காக சுமார் 1350 பில்லியன் ரூபாவை அரசாங்கம் ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
களுத்துறை மாவட்டத்தில் 1340 மில்லியன் ரூபா செலவில் 14 வீதிகளை கார்ப்பட் இட்டு அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டத்தை ஆரம்பித்து வைக்கும் வைபவத்தில் உரையாற்றும் போதே, அமைச்சர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
இவ்வைபவத்தில் தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர், இவ்வருடம் களுத்துறை மாவட்டத்தில் மாகாண சபை மற்றும் மத்திய அரச நிதியொதுக்கீட்டின் கீழ் கிராமிய வீதி அபிவிருத்திக்காக 550 மில்லியன் ரூபா பெறுமதியான கருத்திட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார் .



