ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன் சந்தேகநபர் ஒருவரை மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.
நேற்று (10) இரவு பொரலஸ்கமுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வேரஹெர பகுதியில், மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகள் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே இந்த போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
இதன்படி, 1 கி.கிராம் 80 கிராம் ஹெரோயின் மற்றும் 5 கி.கிராம் 24 கிராம் ஐஸ் போதைப்பொருட்களுடன் வேரஹெர பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் வெளிநாடுகளில் உள்ள போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் தொடர்பு கொண்டு உள்நாட்டில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ளதாக தெரியவந்துள்ளதுடன், மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்பு பிரிவினர் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



