பொதுமக்களின் காணி விடுவிப்பு

1 Min Read

முப்படையினரால் பயன்படுத்தப்படும் பொதுமக்களின் காணிகளை விடுவிப்பது தொடர்பாக கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் பிரதி பாதுகாப்பு அமைச்சர் அருண ஜயசேகர முக்கிய கலந்துரையாடலொன்றில் ஈடுபட்டார்.

கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்தலால் ரத்னசேகர, பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்ரா, முப்படையினர் உள்ளிட்டோரை பிரதி பாதுகாப்பு அமைச்சர் கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் நேற்று சந்தித்து கலந்துரையாடினார். இதன்போது திருகோணமலை மாவட்டம் உட்பட கிழக்கு மாகாணத்தின் தேசிய பாதுகாப்பு மற்றும் தேசிய பாதுகாப்புடன் தொடர்புடைய விடயங்கள், பொதுமக்களின் காணிகளை முப்படையினர் பயன்படுத்தி வருகின்றமை மற்றும் அக்காணிகளை தேசிய பாதுகாப்பு கொள்கைகளுக்கு அமையவும் பொதுமக்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையிலும் காணிகளை விடுவிப்பது தொடர்பாகவும் விரிவாக பிரதி பாதுகாப்பு அமைச்சர் கலந்துரையாடியதுடன், கருத்துகளும் பரிமாறப்பட்டன.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *