பயங்கரவாதத்திற்கு நிதியளிப்பதை ஒடுக்குதல் மீதான சமவாய திருத்தச் சட்டத்தின் எந்தவொரு ஏற்பாடுகளும் அரசியலமைப்புக்கு முரணானதல்ல, சட்டமூலத்தை சாதாரண பெரும்பான்மையுடன் நிறைவேற்றலாமென உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளதாக சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன நேற்று சபையில் அறிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று சபாநாயகர் அறிவிப்பின்போதே உயர்நீதிமன்றத்தின் இத் தீர்மானத்தை சபாநாயகர் சபைக்கு அறிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது; அரசியலமைப்பின் 121 (1) ஆம் பிரிவின் பிரகாரம், உயர் நீதிமன்றத்தில் சவாலுக்கு உட்படுத்தப் பட்ட ‘பயங்கரவாதத்திற்கு நிதியளிப்பதை ஒடுக்குதல் மீதான சமவாய (திருத்த)’ சட்டமூலம் தொடர்பிலாள உயர் நீதிமன்றத்தின் தீர்மானம் கிடைத்துள்ளது.மேற்படி இச்சட்டமூலம் அல்லது அதன் எந்தவொரு ஏற்பாடும் அரசியலமைப்பின் எந்தவொரு ஏற்பாட்டுக்கும் முரணானது அல்ல என உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. இதற்கமைய சட்டமூலத்தை சாதாரண பெரும்பான்மையுடன் நிறைவேற்ற முடியும் என்றும் சபாநாயகர் தெரிவித்தார்.



