கலாசார அடையாளங்களை இழக்காமல் நவீனமயக்கலை நோக்கி ஆசிய நாடுகள் முன்னேற வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்க்ஷ தெரிவித்தார்.
தாய்லாந்தின் ஹாங்காங்கில் நடைபெற்ற 2026 ஆசிய கலாசார பொதுநல மன்றத்தில் உரையாற்றியபோதே அவர்,இதனைத் தெரிவித்தார். 2030-ஆம் ஆண்டளவில் உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியில் 60 வீதம் பங்களிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.இதனால், நவீனமயமாக்கல் விழுமியங்களைச் சிதைக்குமா, அடையாளத்தை பலவீனப்படுத்துமா அல்லது இயற்கைக்குத் தீங்கு விளைவிக்குமா என்பது குறித்த விமர்சனக் கேள்விகளையும் அவர் எழுப்பினார். இலங்கையின் நாகரிகப் பாரம்பரியத்தை மேற்கோள் காட்டி, ‘குளம், ஸ்தூபி, கிராமம் மற்றும் கோயில்’ அமைப்பில் வேரூன்றியிருந்த பண்டைய நிலைத்தன்மை மாதிரியை அவர் வலியுறுத்தினார். மேலும், அந்தச் சமநிலையை நவீன கொள்கையாக மாற்றியதற்காக தமது தந்தையும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷவையும் அவர் பாராட்டினார்.
தலைவர்கள் புதுமைகளைத் தழுவும் அதே வேளையில், ஈடு செய்ய முடியாத மரபுகளையும் சூழல் அமைப்புகளையும் பாதுகாக்க வேண்டும் என்றும்அவர் குறிப்பிட்டார்.
செயற்கை நுண்ணறிவு, தொலைமருத்துவம் மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் போன்ற தொழில்நுட்பங்கள் மூலம் ‘பொது நலப் புதுமைகளின்’ முக்கியத்துவத்தை அவர் சுட்டிக்காட்டியதுடன் அறநெறி இல்லாத தொழில்நுட்பம் சமத்துவமின்மைக்கும் பிளவுகளுக்கும் வழிவகுக்கும் என்று எச்சரித்தார்.



