மாலைதீவில் ஆசிய ஊடக மாநாடு அமைச்சர் நளிந்தவும் பங்கேற்பு

1 Min Read

மாலைதீவில் நடைபெறவுள்ள 21 ஆவது ஆசிய ஊடக மாநாட்டில் பங்கேற்கும் நோக்கில்,சுகாதார மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர்  நளிந்த ஜெயதிஸ்ஸ இன்று (12) செவ்வாய்க்கிழமை மாலைதீவு பயணமாகிறார்.மாலைதீவிலுள்ள வில்லா நௌட்டிக்காவில் இம்மாநாடு நேற்று (11) ஆரம்பமாகியுள்ளது.இம்மாநாடு எதிர்வரும் (14) வியாழக்கிழமை வரை நடைபெறவுள்ளது. பல்வேறு ஆசிய நாடுகளைச் சேர்ந்த கொள்கை வகுப்பாளர்கள், ஊடக உரிமையாளர்கள், ஊடக வல்லுநர்கள்,தகவல்தொடர்பு ஆராய்ச்சியாளர்கள், பார்வையாளர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்கின்றனர்.பங்களாதேஷின் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சர், பிம்ஸ்டெக் அமைப்பின் பொதுச்செயலாளர், சார்க் அமைப்பின் பொதுச்செயலாளர், திமோர்-லெஸ்டேயின் சமூகத் தொடர்புக்கான அரச செயலாளர் மற்றும் ஆசிய பிராந்திய நாடுகளைச் சேர்ந்த பல்துறைத் தலைவர்களும் இந்த மாநாட்டில் பங்கேற்கின்றனர்.

இந்த மாநாட்டில், நான்காவது அமர்வின் முக்கிய உரையை, சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்தஜெயதிஸ்ஸ உரையாற்றவுள்ளார்.

ஊடகக்கொள்கை, ஊடகத்தொழில்சார் மற்றும் பொதுநலனுக்கான தகவல் தொடர்புப் பொறுப்புகள் ஆகிய விடயங்கள் குறித்துஅவரது உரை அமையவுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *