மலையக புகையிரதப் பாதை சீரமைப்பு: 97 இடங்களில் 92 இடங்கள் மீட்பு!

1 Min Read

டிட்வா சூறாவளி காரணமாக, மருதானையிலிருந்து பேராதெனை வரையிலான பிரதான புகையிரதப் பாதையில் நிலச்சரிவுகள், மண் அரிப்பு, பாறை சரிவுகள், பாலங்கள் மற்றும் சிறுபாலங்களுக்கு சேதம் போன்ற 97 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

அவற்றின் 92 தற்போதும் புகையிரத திணைக்களத்தினால் அர்ப்பணிப்புடன் வழமைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளதுடன், றம்புக்கனை – கடுகண்ணாவை இடையே மேலும் 5 இடங்களை வழமைக்கு கொண்டு வருவதற்காக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.May be an image of one or more people, cablecar, train and railroadMay be an image of one or more people, train and railroad

செயல்முறையின் சிக்கல்கள் காரணமாக, விசேட பொறியியல் சோதனைகளையும் திட்டங்களையும் தயாரித்து NBRI புனரமைப்புப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.

புனரமைப்புப் பணிகளுக்கான மூலப்பொருட்களை ஏற்றிச் செல்வதற்காக, மே 03 முதல் ரம்புக்கனையிலிருந்து கடிகமுவவிற்கு புகையிரத சேவை இடம் பெற்று வருகிறது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *