செல்வாக்கு மிக்க சில பெண்கள் பல காரியங்களை செய்கிறார்கள்

1 Min Read

ஸ்ரீலங்கா கிரிக்கெட் குழுவின் தலைவராக ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் எரான் விக்ரமரத்னவின் நியமனத்தின் பின்னணியில் செல்வாக்கு மிக்க ஒரு பெண்மணி இருப்பதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளர் சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மே தினப் பேரணியின்போது உரையாற்றுகையில் இவ்வாறு குறிப்பிட்ட அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் எரான், ஸ்ரீலங்கா கிரிக்கெட் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அவர் மாளிகாவத்தையில் நடைபெற்ற ஜக்கிய மக்கள் சக்தி மே தினப் பேரணியில் கலந்துகொண்டிருக்க வேண்டும். மக்கள் யாரை அரச தலைவர்களாகத் தேர்ந்தெடுத்தாலும், செல்வாக்கு மிக்க சில பெண்கள் பல காரியங்களைச் செய்கிறார்கள் என்பதை நான் மக்களுக்கு கூறிக்கொள்ள விரும்புகிறேன் என்றார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *