பணிகளில் பிரயோகிக்க ஊழியர்களுக்கு அறிவுறுத்தல்

1 Min Read

சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளை கற்ற அரச ஊழியர்கள் அக்கற்கையை பணிகளில் பயன்படுத்துவதற்குரிய இலக்குகளை அடைவதை உறுதி செய்யும் வகையில் ஒரு செயல் பொறிமுறையை மேற்கொள்வதற்கு நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார அறிவுத்தியுள்ளார்.

தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் அதிகாரிகளுடன் அண்மையில் நடைபெற்ற கலந்துரையாடலின்போது அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், புதிய மொழிகளைக் கற்கும் அரச ஊழியர்களின் திறன்கள் தொடர்ந்து பயனுள்ளதாக இருப்பதை உறுதி செய்வதற்காக அவர்கள் வழக்கமான முன்னேற்ற மதிப்பாய்வுகளுக்கு உட்படுத்தப்பட வேண்டும். சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளைக் கற்ற அரச ஊழியர்கள், தங்கள் பணிகளில் அத்திறன்களை உண்மையில் எவ்வாறு பயன்படுத்துகிறார்கள் என்பதை மதிப்பிடுவதற்காக மூன்று அல்லது நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு பின்தொடர் செயல்முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *