அற்புத அன்னை முன்பள்ளிச் சிறார்களுக்கு கற்றல் உபகரணங்கள்

1 Min Read
இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து ஜேர்மன் நாட்டில் வசிக்கும் ஈழத்தழிழர்களின் நிதிப்பங்களிப்பில் நாவற்குழி 5 வீட்டுத்திட்டத்தின் அற்புத அன்னை முன்பள்ளிச்சிறார்களுக்கும்- முன்பள்ளிக்கும் அண்மையில் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சாவகச்சேரி பிரதேசசபை உப தவிசாளர் ராமநாதன் யோகேஸ்வரன் அவர்களது ஏற்பாட்டில் நாவற்குழி அற்புத அன்னை முன்பள்ளியில் மேற்படி உதவித்திட்டம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதேசசபை உறுப்பினர் சுதாகரன், யாழ் மாவட்ட நாடளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களின் செயலாளர் திருமதி. கிருபா கிரிதரன் , நாவற்குழி J/294 கிராம அபிவிருத்திச்சங்கத் தலைவர் டருளன்,
 அற்புத அன்னை சனசமூகநிலைய தலைவர் திவாகரன்  ஆகியோரும் கலந்துகொண்டனர்.
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *