கண்டியில் பிரமாண்டமாக நடைபெற்ற CDB SMB வர்த்தகக் கண்காட்சி

1 Min Read

CDB இன் நிலைபேறான தன்மைக்கான உத்தியின் கீழ், உள்ளூர் தொழில்முனைவோரை ஊக்குவிக்கும் ஒரு விசேட முயற்சியாக அதன் ஆறாவது சிறிய மற்றும் நடுத்தர வணிகக் கண்காட்சி முன்னெடுக்கப்பட்டது. ஜூன் 19 மற்றும் 20 ஆம் திகதிகளில், கண்டியின் ‘சஹஸ் உயன’ (Sahas Uyana) வளாகம் இத்தகையதொரு வலுவூட்டலுக்கான களமாக மாறியதுடன், ‘சிட்டிசன்ஸ் டெவலப்மென்ட் பிசினஸ் ஃபைனான்ஸ் பிஎல்சி’ நிறுவனம் மற்றுமொரு முக்கிய மைல்கல்லையும் எட்டியது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த இரண்டு நாள் நிகழ்வில், நாளொன்றுக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் கலந்துகொண்டு, இலங்கையின் சிறு மற்றும் நடுத்தர வணிகங்களின் பன்முகத்தன்மை, மீள்திறன் மற்றும் புத்தாக்கங்களைக் கொண்டாடும் இலங்கையின் டிஜிட்டல் சந்தைத் தளத்தை நேரடியாக அனுபவித்தனர்.

இந்தக் கண்காட்சியானது உணவு மற்றும் பானங்கள், ஆடைகள் மற்றும் ஃபேஷன் பொருட்கள், அணிகலன்கள், பத்திக் கலைப்படைப்புகள், கைவினை பைகள் மற்றும் விவசாய உற்பத்திப் பொருட்கள் என பரந்த அளவிலான தயாரிப்புகள் மற்றும் சேவைகளின் ஒரு சிறந்த சங்கமமாக விளங்கியது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *