பயனாளிகளுக்கு காணி உரிமப் பத்திரம் வழங்கல்

1 Min Read

காணி அபிவிருத்தி ஒழுங்குவிதி சட்டத்தின் கீழ், பிரதேச விவசாய மக்களுக்கு காணி உரிமப் பத்திரங்கள் வழங்கும் நிகழ்வு ரம்பாவ பிரதேச சபை கேட்போர் கூடத்தில் அண்மையில் இடம் பெற்றது.

நீண்ட காலமாக காணி உரிமையை எதிர்பார்த்து வந்த மக்களின் கனவை நனவாக்கும் வகையில், ரம்பாவ பிரதேச செயலகப் பிரிவின் 98 ஆம் கிராம உத்தியோகத்தர் பிரிவான கம்பிரிகம மற்றும் இலக்கம் 97 ஆம் கிராம உத்தியோகத்தர் பிரிவான கேத்தவ கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் இவர்களுக்கான காணி கச்சேரிகள் நடத்தப்பட்டு, தகுதி பெற்றவர்களுக்கு காணி உரிமப் பத்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டன. இந் நிகழ்வில் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ரம்பாவ பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான சுசந்தகுமார நவரத்ன (Susanta Kumara Navaratne) பிரதம அதிதியாக கலந்து கொண்டு காணி உரிமை பாத்திரங்களை வழங்கி வைத்தார்.

இந் நிகழ்வு ரம்பாவ பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் இடம் பெற்றிருந்தது. இதன் போது பிரதேசத்தின் அதிக விவசாயிகள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *