மட்டக்களப்பில் நவீன நூலகம் ஜனாதிபதியால் இன்று திறப்பு

1 Min Read

மட்டக்களப்புக்கு இன்று (20) புதன்கிழமை வருகை தரும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்கிறார்.

அவர் பங்கேற்கும் நிகழ்வுகளில், மட்டக்களப்பு மாநகர சபையின் பொது நூலகத்தை முதலாவதாக திறந்துவைப்பார். இந்நிகழ்வு இன்று காலை 9.30 மணிக்கு இடம்பெறுகிறது. சுமார் 345 மில்லியன் ரூபா செலவில், இப்பொது நூலகம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மட்டக்களப்பு பழைய மாவட்ட செயலகத்தில் நடைபெறும் ஒருங்கிணைப்பு அபிவிருத்திக் குழுக் கூட்டத்திலும் ஜனாதிபதி பங்கேற்பார். ஜனாதிபதி தலைமையில் இக்கூட்டம் இடம்பெறவுள்ளது. இதனைத் தொடர்ந்து, பிற்பகல் 1.30 மணிக்கு போதைக்கு எதிரான “முழு நாடும் ஒன்றாக” தேசிய செயற்பாடு ஜனாதிபதி அநு ரகுமார திசாநாயக்கவின் தலைமையில் மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *