அரச அதிகாரிகளின் நீதியை நிலைநாட்டும் நடவடிக்கைகளுக்கு இனி அரசியல்வாதிகளின் சட்டவிரோத தலையீடுகள் இருக்காது என்றும் நீதிமன்றம் சம்பந்தப்பட்டவர்களுக்கு பாதுகாப்பு வழங்கும் எனவும் தேசிய மக்கள் சக்தியின் சட்டத்தரணிகள் அமைப்பு தெரிவித்துள்ளது.
சட்டம் சகலருக்கும் சமமாக நடைமுறைப்படுத்தப்படாத யுகத்துக்கு முற்றுப்புள்ளி வைத்து தற்போதைய அரசாங்கம் பிரஜைகளின் உரிமைகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்றும் அந்த சட்டத்தரணிகள் அமைப்பு தெரிவித்துள்ளது.



