இலங்கையின் நிதி வசதி: 5ஆம், 6ஆம் மீளாய்விற்காக மே 27 கூடுகிறது IMF

0 Min Read

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் (EFF) கீழ் இலங்கைக்கான ஐந்தாவது மற்றும் ஆறாவது மீளாய்வுகளின் மதிப்பீட்டிற்காக IMF இன் நிறைவேற்று சபை, மே 27ஆம் திகதி கூடவுள்ளது.

IMF நிறைவேற்று சபை, இலங்கை அடைந்துள்ள பொருளாதார முன்னேற்றத்தையும் அதன் நிதி சீர்திருத்தங்களின் வெற்றியையும் உன்னிப்பாகக் அவதானிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மீளாய்வு வெற்றிகரமாக நிறைவடைந்தவுடன், இலங்கைக்கான நிதியுதவியின் (கடனின்) மிகவும் அவசியமான அடுத்த தவணையான சுமார் 700 மில்லியன் அமெரிக்க டொலரை விடுவிப்பதற்கு IMF நிறைவேற்று சபை அனுமதியளிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *